ராஜீவ் காந்திக்கு சோனியா, ராகுல், பிரியங்கா உட்பட இந்திய பெரும் தலைவர்கள் அஞ்சலி.
புலிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 21-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள 'வீர்பூமி'யில் அமைந்திருக்கும் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இன்று அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் நேரில் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதுபோல் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, மத்திய மந்திரி பன்சால், டெல்லி கவர்னர் தேஜிந்தர் கன்னா, டெல்லி முதல்-மந்திரி ஷீலாதீட்சித் ஆகியோர் ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பள்ளிக் குழந்தைகள் தேசிய கொடியுடன் வந்து ராஜீவ் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தியில் முக்கிய சொற்பொழிவுகளும் ஒளிபரப்பப்பட்டன.
0 comments :
Post a Comment