களனி நதியில் தங்கத் துகள்களை பிரித்தெடுப்போருக்கு அனுமதிப் பத்திரம்
பூகொட பிரதேசத்தில் களனி நதிக்கரை மணலில் இருந்து தங்கத் துகள்களை பிரித்தெடுக்க விரும்புவோருக்கு நேற்று தொடக்கம் அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சகலருக்கும் அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்படும்;. ஆனால் பிரதேசவாசிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க ஆய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
பூகொட களனி நதிக்கரை மணலில் தங்கத் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெருமளவு பிரதேசவாசிகள் மணலை சலித்தெடுக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.
இந்த நடைமுறையில் உள்ள ஆபத்துக் கருதி புவிச் சரிதவியல் சுரங்க ஆய்வுப் பணியகம் அதனைத் தடைசெய்திருந்தது. பின்னர் பிரதேசவாசிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதிப் பத்திர நடைமுறையின்கீழ் அதற்கு அனுமதி அளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டாயிரம் ரூபா கட்டணத்தில் அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்படும். சேகரிக்கப்படும் தங்கத்துகள்களுக்கு வரியும் அறவிடப்படவுள்ளது.
0 comments :
Post a Comment