சன் சீ கப்பல் சிக்கலுடன் தொடர்புடைய மேலும் இரு இலங்கை தமிழர்களுக்கு வழக்கு
2010 ஆகஸ்ட் மாதம் சன் சீ கப்பல் மூலம் எல்.ரி.ரி.ஈ உறுப்பினகள் உட்பட 492 பேர் சட்டவிரோதமாக கனடாவிற்குள் பிரவேசித்ததற்கு உதவிய மேலும் இரு இலங்கை தமிழர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கனடாவிற்குள் பிரவேசித்ததற்கு உதவினார்கள் மற்றும் குறைந்த வசதிகளுடைய கப்பலில் மக்களை புலம்பெயரச் செய்வதற்கு ஏற்பாடு செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுளே இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் இன்று வேன்கூவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்படுமென கனடா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment