நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு ஏறும் முயற்சியில் 110 பேர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முதல் 8,848 மீட்டர் உயரமான இந்த சிகரத்தில், ஜப்பானைச் சேர்ந்த 73 வயதான பெண்ணெருவர் ஏறி சாதனை படைத்துள்ளார். அத்துடன் இந்முயற்சியில் ஈடுபடுபவர்கள் எதிர்வரும் 26ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மலை ஏறும் இக் குழுவில் ஏற்கனவே மூன்று பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையே எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்து, மலையடிவாரத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த, கனடா நாட்டைச் சேர்ந்த நேபாள பெணணான் ஷ்ரேயா ஷாவும் , 61 வயதான ஜெர்மன் டாக்டர் மற்றும் தென் கொரியாவை சேர்ந்த ஒருவர் ஆகியோரே பனி புயலில் சிக்கி இறந்துள்ளதாக நேபாள சுற்றுலாத் துறை அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment