பெற்றோருடன் தூங்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கிறதாம்
பெற்றோருடன் உறங்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாகவும், குண்டாவதில்லை என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், பெற்றொருடன் இல்லாமல், தனியாக உறங்கும் குழந்தைகள் குண்டாவதாக கூறுகின்றனர். இதற்கு காரணம், பெற்றோர்கள் உடன் உறங்கும் குழந்தைகள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். இதனால், தொந்தரவின்றி அமைதியான தூக்கம் கிடைக்கிறது.
ஆனால், தொந்தரவான உறக்கம் உடல்பெருக்கத்துடன் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, தூக்கத்தில் தொந்தரவு ஏற்பட்டால், அது ஹார்மோன்களை பாதித்து உடல்பெருக்கத்தை தூண்டும் என்கிறார்கள்.
இதுக்குறித்து டென்மார்க் நாட்டில் 2 முதல் 6 வயது வரையிலான 500 குழந்தைகளை ஆய்வு செய்தனர்.
அவர்களில் பெற்றொருடன் படுத்து உறங்கும் குழந்தைகளைவிட தனியாக படுத்து உறங்கும் குழந்தைகளின் உடல் எடை மூன்று மடங்கு கூடுதலாக உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு தரும் முடிவுகள் என்னவென்றால், பெற்றொர் அரவணைப்புடன், இரவில் உறங்கும்போது தம்முடன் குழந்தைகள் உறங்கவைத்தால், அந்த குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்படும் அதுமட்டுமல்லாமல், உடல்பெருக்கத்தையும் தடுக்க முடியும் என்கிறார் ஆய்வாளர்களில் ஒருவரான மருத்துவர் நன்னா ஓல்சன்.
மேலும், தங்கள் குழந்தைகளை தங்களுடன் படுத்து கொள்ள அனுமதிக்காத பெற்றோரால் குழந்தைகள் புறக்கணிக்கப்படும் உணர்வுக்கு ஆட்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் ஓவர் வெயிட் ஆகவும் வாய்ப்புள்ளது.
பெற்றொர்களே இனியாவது குழந்தைகளை உங்கள் அரவணைப்பில் உறங்க வையுங்கள்
0 comments :
Post a Comment