கஹவத்தை மொரதொட்டமுல்ல பகுதியில் போலி ஆயிரம் நாணயத் தாள்களை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது சந்தேகநபர்கள் போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்றை வர்த்தக நிலையமொன்றிக்கு வழங்கியதால் எழுந்த சந்தேகத்தின் காரணமாக பிரதேச மக்கள் சந்தேகநபர்களை பின் தொரடர்ந்து சென்று பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 48 போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment