நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை
நீர்கொழும்பு குடாப்பாடு பிரதேசத்தில் குடாப்பாடு தேவாலயத்திற்கு பின்னால் உள்ள கடலோரப் பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றி சுற்றுமதில் அமைக்கப்பட்டு சட்ட விரோதமான செயல்களுக்கு பயன்படுத்த முயற்சி எடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமது பிள்ளைகள் விளையாடுவதற்காக உள்ள கடற்கரைப்பகுதி தனியாருக்கு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று (10) முற்பகல் 9.30 மணியளவில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
இதன் போது எதிர்;ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டோர் எதிர்ப்பு சுலோகங்கள் எழுதப்ப்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.
வீடொன்றை சுற்றி அமைக்கப்பட்ட சுற்றுமதிலை கடந்த செவ்வாய்க்கிழமை (8)உடைத்து நாசமாக்கியமை தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்த 10 சந்தேக நபர்களும் இன்று நீர்கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையிலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
இதேவேளை சுற்றுமதிலை கடந்த செவ்வாய்க்கிழமை உடைத்து நாசமாக்கியமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்த 10 சந்தேக நபர்களையும் நீர்கொழும்பு மஜிஸ்ட்ரேட் இன்று பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையலும் தலா 5 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் 10 சந்தேக நபர்களும் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டனர்.
குடாப்பாடு பிரதேசத்தை சேர்ந்த 6 பெண்களும் 4 ஆண்களுமே பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டவர்களாவர்.
இதேவேளை நீதிமன்றின் முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோரை களைந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.பொலிஸார் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதேவேளை குடாப்பாடு சிpறு மீன்பிடித்துறை மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் பகிஷ்கரிப்பு செய்தமை குறிப்படத்தக்கது.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment