இந்தியாவிலிருந்து தமிழாசிரியர் இறக்குமதி...
தமிழ்ப் பட்டதாரிகள் தொழில் இன்றி வாடும் போது இந்தியாவிலிருந்து 3000 பட்டதாரிகளை இலங்கை பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக அழைத்துவர அரசு ஏற்பாடு செய்கிறதென்று ஒன்றிணைந்த தொழிலற்ற பட்டதாரிகள் சங்கம் குற்றம் சுமத்துகின்றது. இந்தியாவோடு மேற்கொண்ட இரகசியமான கலந்துரையாடலின் பயனாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக தம்மிக முனசிங்காவின் கையொப்பத்துடன் விடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 700-க்கு மேற்பட்ட தமிழ்ப் பட்டதாரிகள் வேலையின்றித் தவிக்கும் போது, அரசாங்கத்தின் இத்தகைய செயலானது மிகவும் வெறுக்கத்தக்கது என்று அறிக்கை மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
போலியான தேசப்பற்றைக் காட்டிக்கொண்டு இந்தியா உட்பட ஏகாதிபத்திய நாடுகளின் முன் மண்டியிம் அரசு நாட்டின் வளங்களைக் குப்பைத்தனமாக விற்றுக் கொண்டு ஆசிரியர்களை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்வது கவலைக்குரியது என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.
0 comments :
Post a Comment