ஜி.எல் பீரிஸ் இன்று அமெரிக்காவிற்கு விஜயம்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இரு நாடுகளுக்கு இடையில் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலான பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பதே இவ்விஜயத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விஜயத்தின போது அமெரிக்க ராஜங்க செயலாளர் ஹிலரி கிளின்டன், மற்றும் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள், காங்கிரஸ் பிரதிநிதிகளையும் ஜி.எல் பீரிஸ் சந்திக்கவுள்ளார். அத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களையும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் சந்திக்கவுள்ளதுடன் அங்குள்ள ஊற்றோ வில்சன் ஞாபகார்த்தமண்டபத்தில் விசேட உரையொன்றையும் அவர் நிகழ்த்தவுள்ளார்.
0 comments :
Post a Comment