இலங்கை ஆசியாவின் ஆச்சரிய பூமியா? பசில் ஐயா பொய் சொல்கின்றார். சிறிபதி சிவனடியான்
ஜேர்மனியிலிருந்து இலங்கை வந்து பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன் இங்கு இரங்கும் இல்லம் எனும் அமைப்பொன்றை நாடாத்தி வருகின்ற முன்னாள் தீவிர புலி விசுவாசிகளில் ஒருவரான சிறிபதி சிவனடியான் அததெரண தமிழ் இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள பேட்டியில் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமான பூமி என அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் தெரிவிப்பது தவறு எனவும் தான் இலங்கையை ஆசியாவின் ஆனந்தமான ஆச்சரிய பூமியாகவே கருதுவதாகவும் தெரிவிதுள்ளார்.
மேலும் புலம்பெயர்நாடுகளில் தமிழ் மக்கள் ஏதோ பயத்தில் வாழ்ந்துகொண்டு இருப்பதாகவும் அவர்களை சில சில இணையத்தளங்கள் தேவையில்லாமல் பொய் பிரச்சாரம் செய்து குழப்புவதுடன் ஸ்ரீலங்காவில் போய் முதலீடு பண்ணினால் அரசாங்கம் பறிக்கும் என மக்களை மிரட்டுவதாக தெரிவிக்கும் அவர் அது எப்படி முடியும்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளதுடன் இதை சில சனங்கள் நம்பிக்கொண்டு தவறுதலான வழிகளில் இருக்கினம் எனவும் ஆனால் இது நடக்காது என்று தங்களுக்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாட்டிலிருக்கின்றவர்கள் தமிழ், சிங்களம் என்று பார்க்காமல், இந்த நாட்டிற்கு வந்து தங்களுடைய அறிவையும் தங்களிடம் இருக்கும் பணத்தையும் தங்களிடமிருக்கும் ஆற்றலையும் பயன்படுத்துவார்களாக இருந்தால் நிறைய வேலை வாய்ப்புக்கள் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment