Wednesday, May 30, 2012

புதையல்தோண்டுவோர் தொடர்பாக தெரியப்படுத்த புதிய தொலைபேசி அறிமுகம்.

புராதன ஸ்தலங்களில் புதையல்களைத் தோண்டும் நோக்கத்துடன் பண்டைய காலத்து பொருட்களை நிர்மூலமாக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தாம் வாழும் பிரதேசங்களில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெறுமானால் அது குறித்து பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும். தொலைபேசி ஊடாக தகவல் அறிவிக்கலாம். அழைக்க வேண்டிய இலக்கங்கள் - 0112 694 727 அல்லது0117 222 333 அல்லது 0112 692 840.இந்தப் பிரிவின் தலைவராக பொலிஸ் அத்தியட்சகர் சமன் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, புராதன முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமைகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அடுத்த மாதம் அமுலுக்கு வரும் என தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் நாயகம் கலாநிதி செனரத் திசாநாயக்க தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com