‘தமிழ்’ தமராவுக்கு வேட்டு, ‘ஆரிய’ சிங்காவுக்கு அவர் சீட்டு
ஊடகங்களின் ஊடாக சில இராஜதந்திரிகள் நடாத்திய குறுகிய போரின் முடிவில், கடந்த செவ்வாயன்று, தமிழரான ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான தனது தூதுவர் தமரா குணநாயகத்தை கியுபாவுக்கு இடமாற்றிவிட்டு, அவரின் இடத்துக்கு தற்போது பெல்ஜியம், லகஸம்பேர்க் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கான தூதுவர் ரவீந்தரநாத் ஆரியசிங்காவை இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு நியமித்திருக்கின்றது.
கடந்த மார்ச்சில், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபை, இலங்கையில் மனிதவுரிமை மீறல்கள் இடம் பெற்றுள்ளன என்ற குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்தே இந்த ஊடகப் போர் ஆரம்பமாகியது. அவரது இடமாற்றம் தவறாக பொருட்கோடல் செய்யப்பட்டுவிடலாம் என்று தமரா குணநாயகம் கூறுகின்றார். இது வெளிநாட்டமைச்சரை உசுப்பேத்தியதாகவும், கியுபாவுக்கான இடமாற்றல் கடிதம் அனுப்பட முன்பு உயர்மட்டத்தில் இந்த விடயம் கலந்துரையாடப் பட்டதாகவும் உள்ளிருந்து செய்திகள் கசிகின்றன.
இந்த விடயத்தில் நெருங்கிய தொடர்புடைய அலுவலர் ஒருவர் கூறுகிரார், ஜெனிவாவில் இலங்கைக்கு ஒரு டீம் பிளேயர் அவசியம் என்று. ஒரு அரசாங்க ஊழியர் தனது பதவிக்காக ஊடக பிரச்சாரத்தை நடாத்த முடியாது. இராஜதந்திரிகள் அவரவரிடத்தில் வைக்கப்படல் வேண்டும். அரசு சொல்வதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இந் விடயம் அரசுக்கும் புகழிடத் தமிழருக்குமிடையே புதிய நெருக்கடிகளை உருவாக்கலாம் என்று எதிர்வுகூறப்படுகின்றது.
0 comments :
Post a Comment