எல்.ரி.ரி.ஈ அரசியல் பிரிவு தலைவியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
எல்.ரி.ரி.ஈ யின் அரசியல் பிரிவின் தலைவியாக செயற்பட்ட தமிழினியை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.
எல்.ரி.ரி.ஈ அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவியாக செயற்பட்ட தமிழினி எனப்படும் சுப்ரமணியம் சிவகாமி தொடர்பான விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்து, அது தொடர்பான அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேக நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
அத்துடன் எதிர்காலத்தில் அவர் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து, இதுவரை எவ்வித ஆலோசனைகளும் கிடைக்கவில்லையென்றும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர் இதனையடுத்து சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 comments :
Post a Comment