யாழ். குடாநாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி பாடநெறி.
இலங்கை பொலிஸ் நீர் சார் விளையாட்டு சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள. யாழ். குடாநாட்டின் பாடசாலை மாணவர்களுக்கான இலவச நீச்சல் பயிற்சி பாடநெறியின் முதல் கட்டம், காரை நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்பிரதேச பாடசாலை மாணவர்கள் இந்நீச்சல் பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும் யாழ். மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்திலும் பயிற்சிகள் நடாத்தப்பட்டதாகவும் பொலிஸ் நீர் சார் விளையாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய சமாதான சூழலில், இவ்வாறான வேலைத்திட்டங்களில், கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தமையையிட்டு பெருமகிழ்ச்சியடைவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment