பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ஜனாதிபதி சந்திப்பு
ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை சிறையிலிருந்து விடுவித்துக் கொள்ளும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இன்;று முற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்றதாக டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இதன்போது, சரத்பொன்சேகாவை விடுவித்துக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சில நெருக்கடிகளுக்கு தீர்வுகளை காண்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாரத்தில் சரத்பொன்சேகாவை விடுதலை செய்ம் வாய்ப்பு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நவலோக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகாவையும் டிரான் அலஸ் அங்கு சென்று சந்தித்துள்ளார்.
0 comments :
Post a Comment