Thursday, May 17, 2012

நீர்கொழும்பில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நால்வர் கைது (படங்கள்)

நீர்கொழும்பு பகுதியில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் நேற்றைய தினம் (16.05.2012) கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு,கட்டானை,குருணாகலை,தங்கொட்டுவ பிதேசத்தை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 60(அறுபது) , போலி நாணயத்தள்கள் அச்சிட பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், கடதாசி, மோட்டார் சைக்கிள், மற்றும் கையடக்க தொலைபேசிகள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்டபோலி நாணயத்தாளுடன் நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த பெர்னாந்து, நீர்கொழும்பு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த அல்லவ, குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி சுபாஸ் பிரியதர்சன மற்றும் பொலிஸார் படங்களில் காணப்படுகின்றனர்.

செய்தியாளர் - எம்.இஸட்.எஸ்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com