மெனிக்பாம் மக்களை மீள் குடியேற்ற துரித நடவடிக்கையாம். மாவட்ட செயலகம்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள குடும்பங்களை துரிதமாக மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் செட்டிக்குளம் மெனிக்பாம் நலன்புரி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் வவுனியா மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
ராணுவத்தின் பொறியியல் பிரிவு, இதுவரை இப்பிரதேசத்தில், குறிப்பிடத்தக்க அளவு கண்ணிவெடிகளை அகற்றியுள்ளதுடன் இப்பணிகள் முழுமையாக பூர்த்தியானவுடன், இந்நலன்புரி கிராம மக்களை தமது சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு, அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளது எனவும் மாவட்ட செயலகம் தெரிவிக்கின்றது.
யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த 3 லட்சத்திற்கும் அதிகமானோர், நலன்புரி கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களில் பெரும்பாலானோர், அரசாங்கத்தினால் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டவுடன், தங்களது சொந்த இடங்களுக்கு செல்லும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக, இந்நலன்புரி கிராமத்தில் தங்கியுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது இந்நலன்புரி நிலையத்தில் 6 ஆயிரம் பேரே தங்கியுள்ளனர். இவர்கள் முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும் கண்ணிவெடிகள் முற்று முழுதாக அகற்றப்படாமையினால், மீள்குடியேற்ற பணிகள் தாமதமடைந்ததாக அரச தரப்பில் குறிப்பிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment