ஓரின சேர்க்கையாளர்கள் நிச்சயம் திருமணம் செய்துகொள்ள முடியும் - ஒபாமா
ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆதரவு தெரிவித்ததையடுத்து அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.இது குறித்து ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு ஒபாமா பேட்டி அளித்துள்ள பேட்டியில் குறிப்பிடுகையில்
ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் நிச்சயம் திருமணம் செய்துகொள்ள முடியும். திருமணம் என்பது சமூகம், மதம் மற்றும் நம்பிக்கைகள் சார்ந்த விஷயமாக இருப்பினும், சம்பந்தப்பட்டவர்களின் உரிமைகளும் இதில் அடங்கி இருக்கிறது. எனது குழந்தைகள் மலியா, சாஷாவுக்கு நிறைய நண்பர்கள் உண்டு அவர்களில் சிலரின் பெற்றோர் ஒரே பாலின ஜோடிகள் ஆவர் எனக் குறிப்பிட்டார்.
ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ளும் முறையை ஒபாமா ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்துள்ளார். ஆனால் தற்தோது ஒபாமா தனது நிலையை மாற்றிக்கொண்டு,ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளமை தென் புளோரிடா மாகாணத்தில் அதிகமாக உள்ள ஓரின சேர்க்கையாளர்களின் வாக்குகளை பெறவே என்று கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment