கடந்த 11 ம் திகதி மருத்துவர்கள் சங்கம் நடாத்திய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு நீதி மன்றம் விதித்த தடை நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த தடைசெய் கட்டளையானது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருதய நோயாளியான ஆர். ஏ. அஜித் சேனக என்பவரால் அரச மருத்துவர் சங்கத்துக்கு எதிராக தொடத்த மனுவை விசாரித்து வழங்கப்பட்டுருந்தது.
எவ்வாறாயினும் மனுதாரர் மருத்துவமனையிலிருந்து வெளியேறி விட்டதாகவும் அவர் இருதய நோய்க்கல்ல விரலில் ஏற்பட்ட காயத்திற்கே சிகிச்சை பெற வந்திருந்ததாகவும் தெரிவித்துள்ள மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்ட நபரின் செயற்பாடு மருத்துவர்களின் புகழுக்கு ஏற்பட்ட இழுக்கு என்றும், அதனால் குறிப்பிட்ட நோயாளியான மனுதாரரிடமிருந்து இரண்டு கோடி ரூபா கேட்டு வழக்கிடவிருப்பதாவும் மருத்துவர்கள் சங்கம் கூறியது.
No comments:
Post a Comment