யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு இருமாத பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் காரைதீவில்
வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு இம்முறை யாழ்ப்பாணத்திலிருந்து இருமாத கால பாதயாத்திரை காரைதீவு வேல்சாமி தலைமையில் நடைபெறவிருக்கிறது.
பாதயாத்திரைக்கு ஆசி வேண்டி காரைதீவு நந்தவனப்பிள்ளையார் ஆலயத்தில் வெள்ளியன்று நடைபெற்ற விசேட பூஜையையடுத்து ஆலய குரு சிவ்ஸ்ரீ.ச.மகேஸ்வரக்குருக்கள் பாதயாத்திரையின்போது கொண்டுசெல்லப்டும் மயில்பீலியுடனான வேலாயுதத்தை வேல்சாமியிடம் வழங்கிவைப்பதையும் பக்தர்களையும் படங்களில் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
0 comments :
Post a Comment