அணு விஞ்ஞானியை கொலை செய்த இஸ்ரேலிய உளவாளியை தூக்கிலிட்ட ஈரான்!
ஈரானின் மூத்த அணு விஞ்ஞானியாக அலி முகமதுவை படுகொலை செய்த வழக்கில் இஸ்ரேலிய உளவாளியான மஜித் ஜமாலி என்பவர் இன்று தூக்கிலிடப்பட்டார். 2010-ம் ஆண்டு அணுவிஞ்ஞானி அலி முகமது படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மஜித் ஜமாலி என்பவர் கைது செய்யப்பட்டார். இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத்துடன் இணைந்து அலி முகமதுவை அவர் படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் கடவுளுக்கு எதிராக போர் தொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிறையில் இருந்த அவர் இன்று தூக்கிலிடப்பட்டார்.
ஈரானின் அணு விஞ்ஞானிகள் 4 பேரை அடுத்தடுத்து இஸ்ரேல் படுகொலை செய்ததாக ஈரான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இஸ்ரேலுக்குப் பதிலடி கொடுக்கும் வகைய்ல் டெல்லி, பாங்காங் உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேலிய தூதரகங்களைக் குறிவைத்து ஈரானியர்கள் தாக்குதல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment