Wednesday, May 16, 2012

பிரபல தமிழ்ப் பேராசிரியரின் மகள் நிதி மோசடியில்?

காலஞ்சென்ற பிரபல தமிழ்ப் பேராசிரியர் ஒருவரின் மகள் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. ஏறத்தாழ இவரால் மோசடி செய்யப்பட்ட பணத்தின் பெறுமதி பலகோடி ரூபாக்களாகுமென தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தன்க்கு அரசாங்க உயர்மட்ட அதிகாரிகள் மத்தியில் பெரும் செல்வாக்குள்ளதாகக் காட்டிக்கொண்டு இப்பெண் பலரிடமிருந்து பல லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

வாகனங்களை தீர்வையின்றி இறக்குமதி செய்வதற்கு அரசால் வழங்கப்படும் விசேட வாகன அனுமதிப் பத்திரம், தொழில் வாய்ப்பு, வெளிநாட்டு விசா என்பவற்றைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தே இந்தப் பெண்மணி பலரிடம் லட்சக்கணக்கான ரூபா பண மோசடி செய்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தனது காணியொன்றைப் பல லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்த நபர் ஒருவரிடமிருந்து, அந்தப் பணத்தை ஓரிரு நாட்களுக்கு வட்டிக்குத் தருமாறு இந்தப் பெண் வாங்கியுள்ளார். அந்தப் பணத்திற்கு உடனடியாகவே வட்டியையும் சேர்த்து காசோலையொன்றை இவர் வழங்கியுள்ளார்.

ஆனால் குறித்த திகதியில் இந்தப் பெண் வழங்கிய காசோலையை வங்கியிலிட்டபோது வங்கியில் பணமில்லையெனக் காசோலை திரும்பியுள்ளது. இதனையடுத்தே இந்தப் பணமோசடிச் சம்பவங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிய வந்துள்ளது.

சட்டத்தரணியான இந்தப் பெண்ணின் தெஹிவலை வீட்டுக்குச் செல்லும் பணம் கொடுத்தவர்கள் தற்போது ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்தப் பெண் தனது குடும்பத்துடன் இந்தியாவுக்குப் பாய்ந்து சென்றுள்ளதாகவும் அங்கிருந்து வேறு நாடொன்றுக்குச் செல்வதே இவர்கள் திட்டமெனவும் நம்பப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com