சிங்கப்பூரில் இலங்கை விலைமாதுகள்!
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைத் (NCPA) தலைவர் அனோமா திசாநாயக்க, விபசாரத்துக்கெனச் சந்தேகிக்கப்படும் பெண் தொழிலாளர்கள் சிங்கப்பூருக்குச் செல்வதைத் தடுக்குமாறு குடிவரவு – குடியகல்வு ஆணையாளரைக் கடித மூலம் கேட்டுள்ளார்.
அந்த நாட்டில், இலங்கையிலிருந்து சென்ற பெண் தொழிலாளர்கள் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படுவதாக கணக்கற்ற முறைப்பாடுகள் அவர்களிடமிருந்து கிடைத்திருப்பதாக அவர் Ceylon Today இதழுக்குச் கூறியுள்ளார். இவை தொடர்பாக தான் விசாரணை செய்து இலங்கைப் பெண் பிள்ளைகள் பலர் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுவதைக் கண்டறிந்துள்ளதாகவும் அவர் அந்த இதழுக்குக் கூறியுள்ளார். மேற்படி ஆணையாளரிடம் இருந்து தனக்கு சாதகமான பதில் கிடைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment