கண்டறிய விசேட வேலைத் திட்டங்கள்
கடந்த ஆண்டில் ஜப்பான் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ரின்மீன் மற்றும் குளிரூட்டப்பட்ட மீன் வகைகள் கதிர்வீச்சு என்பது குறித்து கண்டறிவதற்காக, விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அணுசக்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இறக்குமதியாளர்களை அறிவுறுத்துவதற்கென, விசேட வேலைத்திட்டங்களை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாட்டில் பதிவு செய்யப்பட்ட குளிரூட்டப்பட்ட மீன் மற்றும் ரின் மீன் இறக்குமதியாளர்கள், சுங்க அதிகாரிகள், உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள், சுகாதார உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் செயலமர்வு நடைபெறவுள்ளதுடன் பகுப்பாய்விற்கு பின்னர், அப்பொருட்களை சந்தைக்கு விநியோகிக்க, உரிய ஆவணங்கள் வெளியிடப்படுமென்றும், அதிகார சபை தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment