Saturday, May 5, 2012

புத்தரின் போதனைகள் தீமையில்லாத வாழ்வுக்கும் ஈருலக வெற்றிக்கும் வழிகாட்டுகின்றன -ஜனாதிபதி

புத்த பெருமானின் பிறப்பு, பரி நிர்வாணமடைதல், இறப்பு, ஆகிய முப்பரிமாணங்களை நினைவுகூரும் தினமான வெசக் பண்டிகையை பூரண அரச அனுசரணையுடன் கொண்டாடக் கிடைத்தமையை நான் பெரும் பாக்கியமாக கருதுகின்றேன், என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது வெசக் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தேலும் தெரிவிக்கையில், கடந்த வெசாக் பண்டிகையின் போது உதயமான ஸ்ரீசம்புத்தத்வ ஜயந்தி வருடத்தில் இலங்கை வாழ் பௌத்த மக்கள் பௌத்த கொள்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்ததைக் கண்டு நாம் பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன். புத்தபெருமானின் மீதான ஆழ்ந்த தியானத்தின் அபரிமிதமான மகிழ்ச்சியுடன் இந்த வெசாக் தினத்தில் சம்புத்தத்வ ஜயந்தி கொண்டாட்டங்கள் நிறைவுபெறுகின்றன, என்ற வகையில் இந்த வருடத்தில் இலங்கையெங்கும் பரவிச் சென்ற பாரிய சமய எழுச்சி - ஞானம் - அர்ப்பணம், என்பவற்றை நாம் நினைவுகூருகிறோம்..

புத்த பெருமானின் மீதும் அவரது போதனைகளின் மீதும் உள்ள இந்த மகிழ்ச்சி எல்லா இலங்கையர் களினதும் உள்ளங்களிலும் நீடித்து நிலைத்து நிற்க வேண்டுமென்பதே எமது விருப்பமாகும். குழப்பமில்லாத ஒரு வாழ்க்கையை முன்னெடுக்க புத்தரின் போதனைகள் சிறந்த வழியாகும். இந்தப் போதனைகள் தீமைகள் இல்லாத வாழ்வுக்கும் ஈருலக வெற்றிக்கும் வழிகாட்டுகின்றன.

பிழையான எண்ணங்கள், சிந்தனைகளைக் கொண்டவர்களால் பல்வேறு வகையான பிரிவினைகளையும், மோதல்களையும் தோற்றுவிக்க முயற்சிப்பதுடன் அவை எமது முன்னேற்றத்தின் வாயில்களை மூடிவிடும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

"அத்தனாவ கதங் பாபங் - அத்தனா ஸங்கிலிஸ்ஸதி அத்தனா அகதங் பாபங் - அத்தனாவ விஸஜ்ஜிதி ஸத்தி அஸத்தி பச்சத்தங் - நாஞ்ஞோ அஞ்ஞங் விஸோதயே".

"உன்னாலேயே பாவம் செய்யப்படுகிறது,உன்னையே அது அசுத்தப்படுத்துகிறது,பாவம் செய்யாமலிருப்பவர் தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்கிறார். பாவமும் புண்ணியம் உன்னாலேயே செய்யப்படுகின்றன"

ஒருவர் இன்னொருவரைச் சுத்தம் செய்ய முடியாது என தம்மபதம் குறிப்பிடுகின்றது. எனவே இந்த வெசாக் பண்டிகைக் காலத்தில் எல்லாவகையான பிரிவினைகளையும் ஒதுக்கிவிட்டு தேசிய ஐக்கிய சமய நல்லிணக்கத்திற்காக அர்ப்பணத்துடன் செயற்பட்டு பௌத்த போதனைகளின் ஒளியில் ஈருலக வெற்றிக்கு வழிசெய்வோம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது வெசக் செய்தியில் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com