நாட்டில் யுத்தத்தை ஏற்படுத்துவதற்கு சில சக்திகள் தொடர்ந்தும் முயற்சி- இராணுவப் பேச்சாளர்
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டே மக்கள் நிலைகொண்டுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என பிரித்தானிய உயர் ஸ்தானிகர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் போதே இராணுவப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள இராணுவத்தினர் குறைக்கப்பட்டு ஏனைய மாகாணங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நாட்டில் மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்துவதற்கு சில சக்திகள் தொடர்ந்தும் முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையிலேயே, நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடிய ருவான் வனிகசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment