Thursday, May 17, 2012

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமம்

மட்டக்களப்பு, மயிலம்பாவெளி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளொன்றில் மோதுண்டு 10 வயது பாடசாலை மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மட்டக்களப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஜீ.பி. காருண்ய காந்த் எனும் மாணவனே,இவ்வாறு காயமடைந்தாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவரை மோதிய மோட்டார் சைக்கிள் அருகில் உள்ள மரமென்றுடன் மோதியதன் காரணமாக, மோட்டார் சைக்கிளில் பயனம் செய்தவர் கடும் காயமடைந்துள்ளதுடன் காயமடைந்த மாணவனும், மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com