நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் குடி போதையில் நோயாளியை பார்க்க வந்து அங்கு கடமையில் இருந்த வைத்தியரையும் தாதிகளையும் ஏசிப்பேசி அச்சுறுத்திய சந்தேக நபர்கள் இருவரை நீர்கொழும்பு பிரதான நீதவான ஏ.எம்.என்.பி. இன்று 5 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு - குடாபாடுவ மற்றும் மையங்கனை பிரதேசங்களை சேர்ந்த சந்தேக நபர்களே பிணையில் வீடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களாவர்.
சுந்தேக நபர்கள் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் நான்காம் வார்டில் இரண்டாம் இலக்க கட்டிலில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளியை நேற்று மாலை (24 ஆம் திகதி ) பார்க்க வந்துள்ளனர்.இதன் போது அவர்கள் நேரம் கடந்தும் வைத்தியசாலையில் இருந்தததால் பாதுகாப்பு ஊழியர்கள் அவர்களை செல்லுமாறு கூறியுள்ளனர்.
இந்நிலையில் குடிபோதையில் இருந்த சந்தேக நபர்கள் அங்கு அமைதி குழையும் வகையில் ரகளை செய்துள்ளதுடன் வைத்தியரையும் தாதிகளையும் ஏசிப்பேசி அச்சுறுத்தியுள்ளனர்.
இதனை அடுத்து வைத்திசாலை பொலிஸார் சந்தேக நபர்களை நடமாடும் பொலிஸ் சேவையில் ஈடுபட்டுள்ளோருடன் இணைந்து கைது செய்துள்ளனர்.
வைத்தியசாலையில் வைத்தியர்களதும் ஊழியர்களதும் கடமைக்கு இடையூறு ஏற்படும் வகையில் குடிபோதையில் பிரச்சினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே, சந்தேக நபர்களை பிணையில் நீதிபதி விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டதுடன் இணக்க சபைக்கு இப்பிரச்சினையை கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment