பிரான்ஸ் ஜனாபதி சென்ற விமானம் மின்னல் தாக்குதலுக்கு இலக்கு
பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்காய்ஸ் ஹோலன்ட் சென்ற விமானம் மின்னல் தாக்குதலுக் குள்ளாகியுள்ளது. இருந்த போதிலும் இந்த சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் நாட்டில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், பிராங்காய்ஸ் ஹோலன்ட், 52 சதவீத ஓட்டுகள் பெற்று முன்னாள் ஜனாதிபதி சர்கோசியை தோற்கடித்தார்.
இதையடுத்து, பாரிசில் உள்ள எலிசி அரண்மனையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் ஹோலன்ட் ஜனாதிபதியாக நேற்றுமுன்தினம் பதவியேற்றார். பதவி ஏற்ற சில மணி நேரங்களில், ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்ற அவர் அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல்லை சந்தித்து, பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சு நடத்தினார்.
பாரிசிலிருந்து 'பால்கன் 7 எக்ஸ்' என்ற ஜெட் விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டார். புறப்பட்ட சிறிது நேரத்தில் இவர் விமானத்தின் மீது மின்னல் தாக்கியது. ஆனால், யாரும் பாதிக்கப்படவில்லை. இதனையடுத்து உடனடியாக இவரது விமானம் பாரிசில் உள்ள வில்லாகுப்ளே விமான படை தளத்துக்கு திரும்பியது. அங்கு விமானம் பரிசோதிக்கப்பட்ட பின் மீண்டும் புறப்பட்டு சென்றது.
இதேவேளை பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக ஜீன் மார்க் அயிரால்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜீன் மார்க், பிரான்சில் உள்ள நேன்டஸ் நகர மேயராக இருந்தார். ஜீன் மார்க் நேற்று பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
0 comments :
Post a Comment