பன்விலவில் தேயிலை தொழிற்சாலை ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியது!
பன்வில அலகொல மடுல்கல்ல பெருந்தோட்ட யாக்கத்திற்குச் சொந்தமான தேயிலைத் தொழிற்சாலை நேற்றிரவு 1.30 மணி அளவில் தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூன்றாவது மாடியில் பிடித்த தீ தொழிற்சாலையின் ஏனைய பகுதிக்கும் பரவியதால் தொழிற்சாலையின் கட்டங்கள் இயந்திரங்கள் அரைத்த தேயிலைத் தூள் கொழுந்து என யாவுமே முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.
தொழிற்சாலையின் கீழ் பகுதியில் பறித்த தேயிலைக் கொழுந்துகள் 9000 கிலோவும் அரைத்த தேயிலைத்தூள் 16000 கிலோவும் இருந்துள்ளதாகவும் தொழிற்சாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் குறிப்பிட்ட தீவிபத்து இப்பிராந்தியத்திலுள்ள தமிழ் தோட்ட மக்களின் வருமானத்தில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என அப்பிரதேச தோட்டத் தொழிலாள மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர் .
எரிந்து போன தொழிற்சாலையினை உடன் திருத்தியமைத்து தொழிலாளர்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிப்புறாமல் பாதுகாக்க சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோட்ட அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமவின் தொழிற்சங்க பொறுப்பதிகாரியும் இணைப்பாளருமான முன்னாள் வத்தேகம நகர சபை உறுப்பினர் வரதராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்பால் அலி
0 comments :
Post a Comment