Thursday, May 17, 2012

அரியநேந்திரன் இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றுக்கொள்ளவே இல்லையாம்.

கடந்த மே தினமன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் இலங்கையில் தேசியக் கொடியை தாங்கி நின்றமை பல்வேறுபட்ட சர்ச்சைகளை கிளப்பியிருந்தும் அவர் தனது செயற்பாடானது எந்த விதத்திலும் தவறானது அல்ல என்ற நிலைப்பாட்டையும் வெளியிட்டுள்ளார் என்பது யாவரும் அறிந்தது.

கடந்தவாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒன்றுகூடல் ஒன்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட அரியநேந்திரன், சம்பந்தன் அவர்களிடம் அவரது செயற்பாடு தொடர்பாக கேள்வி எழுப்ப முற்பட்டு அங்கு மூக்குடைபட்டமையை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் இலங்கைநெட் அரியநேந்திரனை தொடர்பு கொண்டு நீங்கள் இலங்கையில் அரசியல் யாப்பினை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதற்கு விரோதமாக செயற்பட மாட்டேன் எனவும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளீர்கள், மறுபுறத்தில் சம்பந்தன் தேசியக் கொடி தூக்கியமை தொடர்பில் கேள்வி எழுப்பியும் உள்ளீர்கள், அவ்வாறாயின் இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றுக்கொள்ளவில்லையா எனக்கேட்டபோது 'நான் அக்கொடியினை ஏற்றுக்கொள்ளவில்லை , இதை நீங்கள் எழுதுங்கள்' என ஒரே வசனத்தில் பதிலளித்தார்.

1 comment:

  1. ஐயாவுக்கு கொடியிண்ட டிசைன் பிடிக்கலையோ?

    ReplyDelete