கொழும்பு உட்பட சில பகுதிகளில் சற்று நேரத்திற்கு முன்னர் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது. கொழும்பு, பதியதாலவை, ஹட்டன் மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இந்த நில அதிர்வு இலங்கைக்குள் மாத்திரம் உணரப்பட்டதொன்றாகவே இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment