பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ. இவர் கடந்த 2007-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு பிறகு அவரது கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செயலாளராக அவரது மகன் பிலாவல் பூட்டோ நியமிக்கப்பட்டார். பெனாசீரின் கணவரான ஆசிப் அலி சர்தாரி தற்போது பாகிஸ்தானின் அதிபராக ஆட்சி செய்து வருகிறார்.
23 வயதாகும் பிலாவல் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர், தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:
பாகிஸ்தானில் சர்வாதிகார ஆட்சி நடத்திய முன்னாள் அதிபர் முஷாரப்தான் எனது தாயை கொன்றார். எனது தாயின் மறைவுக்கு அவரே பொறுப்பு.
எனது தாய் நாடு திரும்பியபோது முதலில் அவரது பாதுகாப்பு அதிகாரிகளை அழித்தார். மேலும் முன்னதாகவே, அவர் எனது தாயை மிரட்டியிருக்கிறார். எனது தாயின் பாதுகாப்பு அதிகாரிகளோடு முஷராப்புக்கு தொடர்பு இருந்தது.
இந்நிலையில் எனது தாயின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. எனினும் பாகிஸ்தானின் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட தவறிய முஷாரப்பை எதிர்த்து எனது தாய் கடைசி வரை குரல் கொடுத்தார்.
வர இருக்கும் தேர்தலில் மக்கள் கட்சியின் சார்பாக பிரச்சாரத்தில் முழு மூச்சாக ஈடுபட உள்ளேன். எனக்கு பாகிஸ்தான் அரசு தகுந்த பாதுகாப்பு வழங்கும் என எதிர்பார்க்கிறேன் என கூறினார்.
No comments:
Post a Comment