Friday, May 18, 2012

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்.

உபவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்கள் ஆர்ப்பாட்டம்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இனந்தெரியாத ஆயுததாரிகளின் தாக்குதக்கு உள்ளாகியுள்ளார்.

இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கொண்டிருந்தபோது நால்வர் கொண்ட குழவினர் மேற்கொண்ட தாக்குலில் காயமடைந்த இவர் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


தர்ஷானந் கலைப்பீட இறுதியாண்டு மாணவரும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக்கழகம் தமது அரசியல் செயற்பாடுகளில் இரு பிரிவுகளாக பிளவு பட்டு நிற்கின்றது. குதிரைக் கஜேந்திரனின் தலைமையில் ஒரு குழுவினரும் பல்கலைக்கழகத்திற்குள் அரசியலை கொண்டுவந்து மாணவர்களின் கல்வியை பாழடியாதே என ஒரு குழுவினரும் மோதிக்கொள்கின்கின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயம்.

இதைத்தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரது அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தமக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்மென கோஷம் எழுப்பியதுடன் துணைவேந்தரின் உருவப்படத்ததையும் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.


மாணவர்களின் இச்செயற்பாடு பல்கலைக்கழக வளாகத்தினுள் பெருத்த பதட்டத்தை தோற்றுவித்துள்ளதுடன் மேற்படி வன்செயலை எதிர்க்கும் மாணவர்கள் குறிப்பிட்ட சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என வேண்டி நிற்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com