ஹிலாரி கிளின்ரன் இந்தியாவில்.
ஆசிய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அயலுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் இன்று இந்தியா சென்றடைந்துள்ளார். கொல்கட்டா சென்றுள்ள ஹிலாரி நாளை மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியை சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பில், சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்து பேசப்படும் என்று தெரிகிறது.
மேலும், வங்கதேசத்துடனான தீஸ்தா நதிநீர் பிரச்சனை குறித்தும் மம்தாவுடன் ஹிலாரி பேசுவார் என்றும் தெரிகிறது. எனவே மம்தாவுடனான இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மம்தாவுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பும் ஹிலாரி, இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை வரும் செவ்வாய் அன்று சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது ஈரான் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, பிரதமர் மன்மோகன் சிங்கையும் ஹிலாரி சந்தித்துப் பேசுவார் என்றும் தெரிகிறது.
0 comments :
Post a Comment