அரசு நல்லவற்றை செய்யும்போது அதற்காக நான் கடை செல்வதில் என்ன குறை?
அரசு எந்த அரும்பொருளையும் பிரச்சினையின்றி எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ள வண. எல்லாவலை மேத்தாநந்த தேரர் புதையுண்டிருக்கும் செல்வங்களும் அரும்பெரும் பொருட்களும் அரசுக்குச் சொந்தமானவை எனவும் அவற்றை அரசு தோண்டியெடுப்பதில் எவ்வித தவறும் இல்லை எனவும் அரசு நல்லதைச் செய்யும்போது அதற்கு வக்காலத்து வாங்குவதற்கு நான் பின்வாங்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
தன்னை விமர்சிப்பவர்களுக்குப் பதிலளித்து தன்னைத் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என்றும் கூறியுள்ள அவர் ஒவ்வொரு மாதமும் தான் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் அகழ்வாராய்ச்சியல் ஈடுபடுவதாவும் கண்டுபிடிப்புகளின் ஊனுயில் பதித்து ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் கையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான இடங்களை அவர்கள் பாதுகாப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
தான் நீண்டகாலமாக அரசியலில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட தேரர் டி. எஸ். சேனாநாயக்கா முதல் இன்றைய ஜனாதிபதிவரை அனைவரோடும் நெருங்கிய உறவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அரும்பொருட்காட்சியகத்தில் சமீபத்தில் இடம் பெற்ற திருட்டு பற்றிய கேள்விக்குப் பதிலளித்த தேரர், "சிலர் கூறுகிறார்கள் அரும்பொருட்சாட்சியக கொள்ளையில் அரசுக்கு தொடர்பு இருக்கிறதென்று. எவ்வளவு முட்டாள்தனமானது இது. அரும்பொருட்காட்சியகம் அரசுக்குச் சொந்தமானது. அது எந்த அரும் பொருளையும் எந்த பிரச்சினையுமின்றி எடுக்கலாம்" என்றார்.
0 comments :
Post a Comment