பிபிசியில் வானிலை அறிவிப்புகள் வாசித்தார் இளவரசர் சார்ல்ஸ்
பிரித்தானியாவின் இளவரசர் சார்லஸ் அந்நாட்டின் ஊடக நிறுவனமான பிபிசியில் வானிலை அறிவிப்புகளுக்கான செய்தி வாசித்தார்.
தனது மனைவி கேமிலாவுடன் ஸ்காட்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து வருகின்ற சார்லஸ், அங்கு பிபிசி டிவி ஸ்டுடியோவை சுற்றிப் பார்த்தார்.
பின்னர் பிபிசி செய்தியில் வானிலை தொடர்பான தகவல்களை வாசித்தார்.
எந்த பதற்றமும் இல்லாமல் கமெராவை நேரடியாக பார்த்து, ஸ்காட்லாந்தில் மழை பெய்யுமா, பனிப்பொழிவு நீடிக்குமா போன்ற வானிலைத் தகவல்களை தெளிவாக கூறினார்.
வானிலை தகவல் கூறும்போது தனக்கே உரிய பாணியில் சில கூடுதல் தகவல்களையும் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். சார்லஸைத் தொடர்ந்து கேமிலாவும் வானிலை செய்திகளை படித்தார்.
இதுகுறித்து பிபிசி வானிலை செய்தியாளர் ஸ்டேவ் டனோஸ் கூறுகையில், இளவரசர் சார்லசும் அவருடைய மனைவி கேமிலாவும் நன்கு அனுபவம் வாய்ந்தவர்களை போல வானிலை செய்திகளை அழகாக கூறினர். அதனால் என் வேலை என்ன ஆகுமோ என்ற பயம் வந்துவிட்டது என்று கூறினார்.
0 comments :
Post a Comment