Sunday, May 27, 2012

தேசிய பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் பொலிஸாருக்கு நலன்புரி நிகழ்வு (படங்கள்)

நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸாருக்கு ஏற்;பாடு செய்யப்பட்ட 'சியபத்வில' கருத்தரங்கு மற்றும் ஒன்று கூடல் நிகழ்வு இன்று (27) முற்பகல் நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் பொலிஸாருக்கான நலன்புரி வேலைத்திட்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் இந்நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் . பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி தமயந்தி ஜயரத்னஇ பேராசிரியரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஆர்;.பி. சூரியபெருமஇ பேராசிரியர் புஞ்சி நிலமே ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கலப்பத்தி. நீர்கொழும்புக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஆனந்த பெர்னாந்து உட்பட பொலிஸ் பொறுப்பதிகாரிகள் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இசை நிகழ்வும் இடம்பெற்றது.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com