மர முந்திரிகை பூசனிக்காய் காரணமாக கொலைச் சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக மாஹோ பொலிஸார் தெரிவித்தனர்.
மாஹோ பிரதேசத்தில் மாட்டைத் தேடிச் சென்ற நபர் மரமுந்திரிகை சாம்பற் பூசனிக்காய் ஆய்ந்து சாப்பிட முயற்சி செய்த போது அவ்விடத்திற்கு வந்த தோட்டத்தின் காவலாளிக்குமிடையே நடைபெற்ற வாக்குவாதத்தால் இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காவலாளி பொல்லால் தாக்கி கூரான கத்தியின் மூலம் நெஞ்சில் குத்தியதால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.
இவ்வாறு மரணம் அடைந்தவர் வதணடேகெதர நாகொல்லாகம என்ற இடத்தைச் சேர்ந்து 28 வயதுடைய மூன்று குழந்தையின் தந்தையாவர்.
கொலை செய்த காவலாளி ஆயுதத்துடன் பொலிஸில் சரண் அடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை,சநதேக நபரை மாஹோ மஜிஸ்ரேட் முன் நிலையில் ஆஜர்செய்த போது எதிர்வரும் 6 ம் திகதி வரை விளக்கமறியயில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment