Monday, May 14, 2012

இலங்கையிலிருந்த சென்ற அகதிப்பெண்ணுக்கு கணவனை பார்க்க ஐந்து நிமிடங்களே!

சிட்னி வில்லாவூட் தடுப்பு முகாமுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அகதியான தனது புதிய மனைவி ரஜினிக்கும் அவளது பிள்ளைகளுக்கும் பிரியா விடை கூற ஐந்து நிமிடங்களே வழங்கப்பட்டன என்று மெல்போனில் வேலை செய்யும் கணேஷ் கூறினார்.

2006-ம் ஆண்டு தனது முதல் கணவன் கொல்லப்பட்ட பின்பு தனது இரண்டு பிள்ளைகளுடன் 2010-ல் கிறிஸ்மஸ் தீவுக்குச்சென்ற ரஜினி அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு மாறிமாறி பல தடுப்பு தடுப்புமுகாமில் வைக்கப்பட்டனர். கடந்த செப்டம்பரில ரஜினியும் பிள்ளைகளும் ASIO வின் அகதிப் பாதுகாப்பு அறிக்கையை எதிர்பார்த்து அகதி அந்தஸ்து வழங்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு விடுமுறையின் போது அவர்களது கணேசும் ரஜினியும் பிரிஸ்பேனில் சந்தித்தனர். இவ்வாண்டு ஆரம்பத்தில் அவர்களது திருமணம் மெல்போனில் நடைபெற்றது. ரஜனி 8 மற்றும் 4 வயது கொண்ட தனது இரு பிள்ளைகளையும் ஆர்ட் ஆசிரியையான பாம் நெல்சனின் உதவியுடன் பாடசாலையில் சேர்த்தார்.

ASIO வின் மதிப்பீட்டு அறிக்கை ரஜினிக்குச் சாதகமாக இல்லாதிருந்தது என்ற காரணத்தைக் காட்டி மனிதாபிமானமற்ற முறையில் ஐந்தே நிடங்களில் புதிய மனைவியான ரஜினியையும் அவளது இரண்டு பிள்ளைகளையும் கணேசிடமிருந்து பிரித்துள்ளனர் அவுஸ்திரேலிய அதிகாரிகள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com