Sunday, May 20, 2012

பொன்சேகாவின் விடுதலை பத்திரத்தில் ஜனாதிபதி கையொப்பம் ! அனோமா நன்றி தெரிவிப்பு

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினை விடுதலை செய்வது தொடர்பான பத்திரத்தில் நேற்று முன்தினம் கையொப்பம் இட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அப்பத்திரத்தை நிதியமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார். இப்பத்திரம் நாளை திங்கட்கிழமை நீதியமைச்சிற்கு கிடைக்கப்பெறுமென்றும், அதற்பின்னர் பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் முடிவெடுக்கப்படுமென்றும் ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்துரைத்த திருமதி அனோமா பொன்சேகா பத்திரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளமையை தான் மதிப்பதாக தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு இவ்வாறு நிவாரணம் கிடைத்ததையிட்டு தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ள அவர் இதன்பிரகாரம் சரத் பொன்சேகாவிற்கு சாதாரண மனிதரை போன்று மீண்டும் சமூகத்தில் செயற்பட சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் சரத் பொன்சேகாவின் உடல் நிலை தற்போது தேரி வருவதாக அனோமா பொன்சேகா குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் வாழும் அவரின் இரு புதல்வியர்களும் நாடு திரும்பியுள்ளதுடன் நேற்று அவரை நவலோக வைத்தியசாலையில் சந்தித்துள்ளனர். தந்தையாரை சந்தித்து திரும்பிய புதல்வியர்கள் தந்தை தம்மை நீண்ட நாட்களுக்கு பின்னர் கண்டதையிட்டு கண்ணீர் விட்டு அழுததாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment