அரச பாதுகாப்பு பெறுபவர்களின் விபரங்களை வெளியிட முடியாது என்கிறார் அமைச்சர் தினேஷ்
அரச பாதுகாப்பு பெறும் நபர்களின் பெயர் விபரங்களை வெளியிட முடியாது என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரநாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரச பாதுகாப்பு பெறும் மக்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிட முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத சில அரசியல் தலைவர்களுக்கும் அரச பாதுகாப்பு வழங்கப்படுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment