சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்படும் இலங்கைப் பெண்கள் பாலியல் தொழிலில் பலவந்தமாக ஈடுபடுத்தப்படுகின்றார்கள் என பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிலையம் கூறுகிறது. சிலாபத்திலிருந்து சிங்கப்பூருக்கு அனுப்ப்பட்ட17 வயதுடைய பெண்ணின் மூலம் இந்த விடயம் மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றது.
கைநிறைய நல்ல சம்பளம் தரும் தொழில் பெற்றுத்தருவமாக ஆசை வார்த்த்தை கூறப்பட்டு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். பத்து பதினைந்து என்று ஒரு நாளில் பல வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்ய வற்புறத்தப்படுவதாகவும் தெரிய வருகின்றது.
இத்தகைய பாலியல் தொழிலுக்கு இலங்கைப் பெண்களை அனுப்பும் வர்த்தகம் நல்ல முறையில் இலங்கையில் இடம் பெறுவதாகவும் சிங்கப்பூரில் 200 க்கு மேற்பட்ட இலங்கைப் பெண்கள் இவ்வாறு இத்தொழிலில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இத்தொழில் ஈடுபட்டு தாய்நாடு திரும்பிய பலர் இது பற்றி பொலிசுக்கோ மற்றும் உரியவர்களுக்கோ சொல்ல வெட்கப்படுகிறார்கள் என்று பெண்கள் மற்றும் சிறுர் பாதுகாப்பு நிலையம் ஊடாக அறிய முடிகின்றது. பல பெரும் புள்ளிகளும் சில அரசியல் வாதிகளும் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் அறிய முடிகின்றது.
No comments:
Post a Comment