Thursday, May 31, 2012

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் பாரிய வீழ்ச்சிடைந்துள்ளதாம்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் பாரிய வீழ்ச்சியினை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஏற்றுமதி வருமானத்தை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பாரிய வீழ்ச்சியினை சந்தித்துள்ளது.

இதற்கமைய கடந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்றுமதி வருவாய் 10.2 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

தொழில்துறை ஏற்றுமதி 10.9 வீதத்தினாலும், ஆடை தயாரிப்பு ஏற்றுமதி 11.7 வீதத்தினாலும், விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி 10.1 வீதத்தினாலும் தேயிலை ஏற்றுமதி 6.3 வீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளன.

இதேவேளை, இலங்கையின் நிதியாண்டில் முதலாவது காலாண்டு பகுதியில் ஏற்றுமதி 1.4 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment