சக்தியில் புலிப்பயங்கரவாதத்தை நியாயப்படுத்தி மின்னியவர் சிறிறங்கா. இவர் மின்னிய மின்னலில் கண்ணையும் காதையும் இழந்த மலையகத்து அப்பாவி இளைஞர்கள் இவரின் உண்மை முகம் புரியாமல் பாராளுமன்றுக்கு அனுப்பி வைத்தனர். அடுத்த தேர்தலில் மலையத்தில் தனது பருப்பு அவியாது என திடமாக நம்பியுள்ள ரங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பூரண ஆதரவுடன் வடக்கில் ஓர் இடத்தை பிடிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேகநபர்கள் தம்மை விடுவிக்ககோரி மேற்கொண்ட உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட ஆhபாட்டத்தில் கலந்து கொண்ட சிறிரங்கா அரசியல் சிறை கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைப்பதானால் கருணா, பிள்ளையான் மற்றும் கேபி ஆகியோரையும் தடுத்து வைக்க வேண்டும் தெரிவித்துள்ளார்.
'பல அரசியல் கைதிகளை சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்துள்ளனர். ஆனால் இந்த நபர்களை வழநாடாத்திய , கட்டளை வழங்கிய கருணா அம்மான், கேபி, பிள்ளையான் போன்றோர் சுதந்திரமாக பாராளுமன்றிம் அரச வீடுகளிலும் உள்ளனர். அவர்களுக்கு நீர், உணவு வழங்கியவர்கள் 10, 15 வருடங்கள் சிறையில் சந்தேகத்தின் பேரில் உள்ளபோது இவர்கள் இவ்வாறு இருப்பது எவ்வகையில் நியாயம் என நாம் கேட்கிறோம். இவர்களை சிறையில் வைத்திருப்பதானால் கேபி, கருணா அம்மான், பிள்ளையான் போன்றோரையும் உள்ளே எடுக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு சட்டம் மற்றையவருக்கு இன்னொரு சட்டம் என்பதை நாம் நிராகரிக்கிறோம். கைதிகள் சிறையில் உள்ளனர். இறுதி யுத்தத்தில் தாங்கள் புலி என கூறி சரணடைந்தவர்களை அரசு புனர்வாழ்வளித்து விடுதலை செய்கிறது. ஆனால் புலி என்ற சந்தேகத்தில் கைது செய்தவர்களை சிறையில் வைத்துள்ளளனர்.
இவர்களையும் புனர்வாழ்வு செய்யுங்கள் அல்லது நீதிமன்ற வழியில் வழக்குத் தொடரவும் அப்படியில்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். யுத்தம் முடிந்து இன்னமும் இவர்களை தடுத்து வைத்திருப்பது மேலும் இனவாதத்தை தூண்டும் செயலாகும்'. என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment