யாழ் , மட்டு மாவட்டங்களுக்கான புதிய அரச அதிபர்கள் பதிவியேற்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக திருமதி சரோஜினி மன்மதராஜாசார்ல்ஸ் பதவியேற்றுக் கொள்ள யாழ். மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தனது கடமையை இன்று பொறுப்பேற்றுள்ளார்.
வவுனியா அரசாங்க அதிபராக முன்னர் பணியாற்றிய திருமதி சரோஜினி மன்மதராஜா சார்ல்ஸ் இன்று புதன்கிழமை 11.10 மணியளவில் மட்டக்களப்பு அரசாங்க அதிபராக[ப் பொறுப்பேற்றார்.
மட்டக்களப்பு கச்சேரிக்கு விஜயம் செய்த புதிய அரசாங்க அதிபருக்கு மாவட்ட செயலக ஊழியர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.
மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதையடுத்து சர்வமதத் தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் கடமையை அவர் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இதேவேளை யாழ்.மாவட்ட அரச அதிபராக முன்னர் இருந்த திருமதி இமெல்டா சுகுமார் ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றிருப்பதால் மட்டக்களப்பில் அரச அதிபராக கடமையற்றிய சுந்தரம் அருமைநாயகம் இன்று முதல் யாழ்.மாவட்டத்தின் அரச அதிபராக கடமையைப் பெறுப்பேற்றுள்ளார்.
இந்தப் பதவியேற்கும் வைபவம் இன்று புதன்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
0 comments :
Post a Comment