ஓந்தாச்சிமடத் தமிழ்ச் சிறுமிமீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு அரபியர் கைது.
கிழக்கு மாகாணம் ஓந்தாச்சிமடம் என்ற இடத்தைச் சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவரை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இரு சவூதி அரேபிய நாட்டவர்களையும், இப்பெண்ணை விபச்சாரத்திற்குள் தள்ளிய மருதானையைச் சேர்ந்த பெண் ஒருவரையும் ஹிக்கடுவ பொலிசார் நேற்றுக் கைது செய்துள்ளனர்.
ஹிக்கடுவவில் அமைந்துள்ள உல்லாசப் பயணிகள் விடுதி ஒன்றில் வைத்து இந்தப் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஹிக்கடுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment