Thursday, May 24, 2012

கைதிகள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டம் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைப்பு

விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டம் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய சிறைச்சாலைகளிலுள்ள தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த கைதிகளே தமது உண்ணாவிரத போராட்டத்தை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

குறித்த கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து ஒரு மாத காலத்திற்கு விடுதலை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமத்திரன், ஸ்ரீதரன் மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் கொழும்பு சிறைச்சாலைக்கு இன்று விஜயம் மேற்கொண்டு இது தொடர்பாக அறிவித்தனர்.

இதனையடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் ஒரு மாத காலத்திற்கு உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.

No comments:

Post a Comment