குளியாப்பிடிய குளத்தில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி
குளியாப்பிடிய கெகுணுகொல்ல நித்துல்லகஹபிடிய குளத்தில் இன்று ஒரு மணி அளிவில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கடுபொத்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவர் நித்துல்லகஹபிடிய என்ற இடத்தைச் சேர்ந்த 14 வயதுடைய முஹமட் நப்லி என்ற மாணவனாவார். இவர் கெகுணுகொல்ல தேசிய பாடசாலையில் 9 ஆம் ஆண்டு கல்வி பயில்பவராவார். மற்றையவர் அவரின் நண்பன் எனக் கூறப்படும் 18 வயதுடைய நுவரெலியவை சேர்ந்த குணசீலன் பிரசன்ன என்ற மாணவனாவார்.
இவர்களுடைய பிரேதம் முவன்கல்ல வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை கடுபொத்த பொலிஸார் மேற் கொண்டு வருதாகவுகம் தெரிவிக்கப்படுகிறது.
இக்பால் அலி
0 comments :
Post a Comment