பின்லேடன் வீட்டில் ஏராளமாக ‘வயாகரா’ கிடைத்த ரகசியம் தெரியுமா?
“பின்லேடன் பாகிஸ்தானில் தங்கியிருந்தபோது, வயாகராவுக்கு ஒப்பான இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சிரப் ஒன்றை பயன்படுத்தினார்!” இந்த தகவல் தகவல், அதிக எதிர்பார்ப்புடன், அடுத்த மாதம் வெளியாகவுள்ள புத்தகம் ஒன்றில் இடம்பெறவுள்ளது என்று தெரியவருகிறது.
பீட்டர் பேர்கன் எழுதி, வரும் மே 1-ம் தேதி வெளியாகவுள்ள புத்தகம், “10 வருட பின்லேடன் மனிதவேட்டை: செப்.11-இலிருந்து அபொத்தாபாத் வரை” (Manhunt: The Ten-Year Search for Bin Laden — from 9/11 to Abbottabad) இந்தப் புத்தகத்தில் இடம்பெறவுள்ள சில பகுதிகள் இப்போதே அமெரிக்க மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
(புத்தகத்துக்கு நல்ல விளம்பரமாகவும் அமைந்துவிட்டன)
அந்த வகையில் இந்த ‘இயற்கை வயாகரா’ விவகாரமும் புத்தகத்தில் இடம்பெறுகிறது என்ற தகவலை வெளியிட்டுள்ளது வாஷிங்டன் எக்ஸாமினர்.
இந்த புத்தகத்தின் ஆசிரியர் பீட்டர் பேர்கன், CNN செய்திப் பிரிவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆய்வாளர். ஊடகத்துறையில் பின்லேடன் பற்றி பல அதிரடித் தகவல்களை அவ்வப்போது வெளியிடும் நபர். CNN வெளியிடும் பின்லேடன் தொடர்பான நியூஸ் ஸ்டோரிகள் பெரும்பாலும், இவரது தயாரிப்பே.
1997-ல் CNN-க்காக பின்லேடனை நேரில் பேட்டிகண்டு வெளியிட்டவர் இவர்.
சுருக்கமாகச் சொன்னால், பின்லேடன் தொடர்பாக நம்பகமான தகவல்கள் இவரிடம் இருந்து வரும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது!
பின்லேடன் கொல்லப்பட்டபோது அவரது வீட்டில் கிடைத்த பொருட்களை ஆராய அனுமதிக்கப்பட்டவர்கள், இரண்டே இரண்டு பத்திரிகையாளர்கள்தான். அவர்களில் ஒருவர் பீட்டர் பேர்கன். அத்துடன், பின்லேடன் வாழ்ந்த இல்லத்துக்குள் அனுமதிக்கப்பட்ட ஒரே வெளி நபரும் இவர்தான் என்று விளம்பரம் செய்கிறது அவரது புத்தகத்தின் பதிப்பாளரான கிரவுண் பப்ளிஷிங் குரூப்!
வயாகராவுக்கு ஒப்பான அவீனா சிரப் (Avena syrup), பின்லேடனின் வீட்டில் ஏராளமான அளவில் கிடைத்தது என்று பீட்டரின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அவீனா சிரப் ஒரு மூலிகைத் தயாரிப்பு மருத்துவப் பொருள்.
பின்லேடனின் வீட்டில் அவீனா சிரப் கிடைத்த விபரம் தற்போது வெளியானதை அடுத்து, NBC News டி.வி. சேனலின் மெடிகல் எடிட்டர் நான்சி சின்டர்மேன், அது ஒரு வகை இயற்கை வயாகரா என்று தனது மருத்துவ நிகழ்ச்சியில் தெரிவித்தார். “இது பின்லேடனுக்கு மனோதத்துவ ரீதியான சக்தியையும் வழங்கியிருக்கும் (“Of course, it could have provided Osama with a psychosomatic boost”) என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
பின்லேடன் கொல்லப்பட்ட 1-வது ஆண்டு நிறைவையொட்டி, பீட்டர் பேர்கனின் Manhunt: The Ten-Year Search for Bin Laden — from 9/11 to Abbottabad புத்தகம், அமெரிக்காவில் வெளியிடப்படுகிறது.
பின்லேடனின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.
நன்றி விறுவிறுப்பு
0 comments :
Post a Comment